Categories
கிரிக்கெட் விளையாட்டு

”கேப்டன் பதவியிலிருந்து” திடீரென விலகினார் ”தினேஷ் கார்த்திக்” …!!

ஐபிஎல் போட்டி ஏறக்குறைய இறுதிகட்டத்தை எட்டி இருக்கின்றது. பிளே ஆப் சுற்றுக்கு செல்லக்கூடிய வகையில் முதல் நான்கு இடத்தில் டெல்லி, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா அணிகள் உள்ளன. கொல்கத்தா அணி 7 போட்டிகளை விளையாடி 4 வெற்றி, 3 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று நான்காம் இடத்தில் உள்ளது. அந்த அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் கேப்டன் பொறுப்பில் இருந்து திடீரென விலகி உள்ளார்.

தினேஷ் கார்த்திக்கின் இந்த முடிவு ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள தினேஷ் கார்த்திக், பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்த விரும்புவதால் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுகின்றேன் என்று தெரிவித்துள்ளார். கேப்டன் பொறுப்பை இயான் மோர்கனிடம் வழங்குமாறு அணி நிர்வாகத்திற்கு தினேஷ் கார்த்திக் கோரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |