Categories
உலக செய்திகள்

“உலகிலேயே மிகப்பெரிய டைனோசர் இனம்!”.. ஆஸ்திரேலியாவில் கண்டறியப்பட்ட எலும்புகள்..!!

ஆஸ்திரேலியாவில் பல வருடங்களுக்கு முன் கிடைத்த எலும்புகள், உலகிலேயே மிகவும் பெரிதான டைனோசர் என்று கண்டறியப்பட்டுள்ளது. 

ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு கால்நடை பண்ணையில் சுமார் பதினேழு வருடங்களுக்கு முன்பு சில எலும்புகள் கண்டறியப்பட்டுள்ளது. அதனை விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டதில் கூப்பர் எனும் புதிய வகை டைனோசர் இனம் என்று தெரியவந்துள்ளது. மேலும் பூமியில் உள்ள டைனோசர் இனங்களில் இது பெரிய இனம் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளார்கள்.

இந்த டைனோசர் கிரீத்தேசியக் காலக்கட்டத்தில் வாழ்ந்திருக்கிறது. மேலும் இது Sauropod  வகையை சேர்ந்த தாவரங்களை உண்ணக்கூடிய இனம். மேலும் உலகிலேயே மிகவும் பெரிய டைனோசராக இது இருக்க வாய்ப்புள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அதாவது 25 லிருந்து 30 மீட்டர் நீளமும், இரண்டு மாடிகளின் அளவுடைய உயரமும் இருக்கும் என்று அதன் எலும்புகளை வைத்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

Categories

Tech |