Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? டிப்ளமோ என்ஜினீயர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

டிப்ளமோ என்ஜினீயர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நடுக்காட்டூர் கிராமத்தில் முருகானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு டிப்ளமோ என்ஜினீயரான பொன்னுச்சாமி ராஜா என்ற மகன் இருந்துள்ளார். இவர் நாகர்கோவிலில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் தொழில் கல்வி படித்து விட்டு தற்போது வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் பொன்னுச்சாமி ராஜா திடீரென வீட்டின் அருகில் உள்ள மாட்டு தொழுவத்தில் கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனை பார்த்த அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்து புதூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் பொன்னுச்சாமியின் ராஜாவின் உடலை மீட்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த புதூர் காவல்துறையினர் பொன்னுச்சாமி ராஜா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |