டிராக்டர் டிப்பரை திருடிச் சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்திலுள்ள சிறுகரம்பலூர் பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தி டிராக்டரில் இருக்கும் டிப்பரை மட்டும் வயலில் நிறுத்திவிட்டு டிராக்டரை வீட்டிற்கு ஓட்டி சென்றுள்ளார். அதன்பின் வயலுக்கு சென்று பார்த்த போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் காணாமல் போயிருந்ததை கண்டு கிருஷ்ணமூர்த்தி அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இது பற்றி கிருஷ்ணமூர்த்தி காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் வேல்முருகன் என்பவர் டிப்பரை திருடிச் சென்றது தெரியவந்துள்ளது. பின்னர் வேல்முருகனை கைது செய்து அவரிடமிருந்த டிப்பரை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.