ஜூன் , ஜூலை காவேரியில் இருந்து தமிழகத்துக்கு திறந்துவிட வேண்டிய நீரை கொடுக்க காவேரி மேலாண்மை வாரியம் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் கர்நாடகா தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதையடுத்து ஒவ்வொரு மாதமும் கர்நாடகா எவ்வளவு தண்ணீரை தமிழகத்திற்கு திறந்து விட வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் வழிகாட்டியுள்ளது. அதன்படி ஜூன் மாதம் 9.19 டிஎம்சி நீரை தமிழகத்துக்கு வழங்க ஆணையம் உத்தரவிட்டது. ஆனால் கர்நாடகாவோ தமிழகத்துக்கு வெறும் 2 டிஎம்சி நீர் மட்டுமே வழங்கியது. இது குறித்து கர்நாடகா_விடம் தொடர்ந்து வலியுறுத்தியும் பருவ மழையை , அணைகளில் நீர் இருப்பை காரணம் காட்டி தமிழகத்துக்கு கொடுக்கும் நீரை மறுத்ததோடு இல்லாமல் மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது.
இந்நிலையில் டெல்லியில் உள்ள சேவா பவனில் காவேரி மேலாண்மை ஆணைய தலைவர் மசூத் உசைன் தலைமையில் ஆணையத்தின் 4_ஆவது கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் பிரபாகர், காவிரி தொழில்நுட்ப குழு உறுப்பினர் சுப்பிரமணியன் பங்கேற்றனர். கூட்டம் முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய மசூத் உசைன் கூறுகையில் , தமிழகத்துக்கு ஜூன் , ஜூலை மாதம் வழங்கவேண்டிய காவிரி நீரை கர்நாடகா திறக்கவேண்டும். தென்மேற்கு பருவமழை கடந்த 20ம் தேதி வரை குறைவாக பெற்றதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கர்நாடக அணைகளுக்கு மிகக் குறைவான தண்ணீரே வந்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மழை அளவைப் பொருத்து, தமிழகத்துக்குரிய காவிரி நீரை திறக்க கர்நாடகாவுக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது .