ஈரானில் பெற்ற மகனை கொடூரமாக கொன்ற பெற்றோர் மேலும் இரண்டு கொலைகள் செய்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஈரானில் 47 வயதுடைய Babak Khorramdin என்ற திரைப்பட இயக்குனரின் உடல் பாகங்கள் மட்டும் கடந்த மே மாதத்தில் மீட்கப்பட்டது. இது தொடர்பான விசாரணையில் இயக்குனரின் பெற்றோர் Akbar Khorramdin மற்றும் Iran Mousavi இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அதில் தங்கள் மகனுக்கு தூக்க மருந்தை கொடுத்து தூங்கிய பின்பு கத்தியால் கொடூரமாக குத்திக் கொன்று உடலை துண்டாக்கி பைகளில் வைத்து குப்பையில் எரிந்ததாக கூறினர். இந்நிலையில் தற்போது அவர்கள் ஏற்கனவே இரண்டு கொலைகள் செய்தது தெரிய வந்துள்ளது. சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு தங்களது மருமகன் (மகளின் கணவரை) கொலை செய்துள்ளனர்.
அதன்பின்பு கடந்த 2018 ஆம் வருடத்தில் தங்கள் மகளையும் கொன்றதாக கூறி அதிர செய்துள்ளனர். மேலும் இவர்கள் மூன்று பேரையும் ஒரே மாதிரி கொலை செய்தோம் என்று கூறுகிறார்கள். இதுமட்டுமல்லாமல் தங்கள் பிள்ளைகளை கொலை செய்ததில் குற்ற உணர்ச்சி தங்களுக்கு சிறிதும் இல்லை என்று கூறுகிறார்கள்.
அவர்கள் ஒழுக்கமான வாழ்க்கை வாழ வில்லை, என்றும் தங்களின் மகள் போதைப்பொருளை பயன்படுத்தி வந்ததாகவும் சமூகத்திற்கு கேடு விளைவித்ததால் கொலை செய்ததாக கூறியுள்ளார்கள். மேலும் Akbar Khorramdin இராணுவ கேணலாக இருந்து ஓய்வு பெற்றவர் ஆவார். அவர் மனரீதியான பாதிப்பால் கொலை செய்திருப்பார் என்று நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.
மேலும் மருத்துவ சிகிச்சை மேற்கொண்ட பின்பு, தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஈரானில் கொலை குற்றவாளிகளுக்கு மரண தண்டனை தான் விதிக்கப்படும். எனினும் பெற்றோர் தங்கள் குழந்தைகளை கொன்றால் 10 வருடங்கள் தண்டனை விதிக்கப்படுகிறது.