ஐந்து மடங்கு விலை கொடுத்து மது வாங்க நிற்கும் குடிமகன்களை மோகன் ஜி ட்விட்டரில் திட்டி தீர்த்துள்ளார்
திரௌபதி திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் மோகன்ஜி இந்த படத்தின் மூலம் மிகவும் பிரபலம் ஆகியுள்ளார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் மோகன்ஜி தன்னை விமர்சித்து வருபவர்களுக்கு பதிலடி கொடுத்தும் சமூக சார்ந்த பிரச்சினைகளுக்கு கருத்துக்கள் தெரிவித்தும் வருகிறார். தற்போதைய நிலையில் ஊரடங்கு குறித்தும் அதனை மக்கள் பின்பற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தி வரும் இவர் மது பிரியர்களை திட்டி தீர்த்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட மோகன் ஜி அடுத்தநாள் செலவுக்கு கூட பலர் காசில்லாமல் கஷ்டப்படும் நிலையில் ஒரு கூட்டம் ஐந்து மடங்கு விலை கொடுத்தாவது தினமும் மது வாங்கி அருந்துகிறார்கள். இவனுங்க என்ன டிசைன்.. ஒரே ஒரு நாள் டாஸ்மார்க் திறக்கணும் கோரிக்கை வேற என திட்டி தள்ளியுள்ளார் மோகன் ஜி
அடுத்த நாள் செலவுக்கு கூட பலரிடம் காசில்லாமல் கஷ்டப்படுகிறார்கள்.. ஆனால் ஒரு கூட்டம் ஐந்து மடங்கு விலை கொடுத்து வாங்கி தினமும் மது அருந்துகிறார்கள்.. என்ன டிசைன் இவனுங்க.. ஒரே ஒரு நாள் டாஸ்மாக் திறக்க கோரிக்கை வேற..
— Mohan G Kshatriyan (@mohandreamer) April 11, 2020