Categories
சினிமா தமிழ் சினிமா

நீ !உன் தாய், தந்தைக்கு பிறந்தாய் என்பதுதான் நற்செய்தி.. அவர்கள் எப்படி இணைந்தார்கள், என்பது கேவலம்… இயக்குநர் பேரரசு காட்டம்..!!

கந்தசஷ்டி கவசம் குறித்து விமர்சித்த கருப்பர் கூட்டத்தை கண்டித்து இயக்குநர் பேரரசு காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் கந்தசஷ்டி கவசம் குறித்து சர்ச்சைக்குரிய வீடியோ வெளியிட்டதற்கு  பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.. அந்த வகையில் திரைப்பட இயக்குநர் பேரரசு தனது கண்டனத்தைத் தெரிவிக்கும் வகையில் முகநூலில் காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ஒரு தாய் தன் குழந்தைக்கு தாய்பாலூட்டுவது கண்ணியம். அதைக் காமக் கண்ணோடு கண்டு அத்தாயின் மார்பை வர்ணிப்பது எவ்வளவு வக்ரமோ அவ்வளவு வக்ரம் கந்த சஷ்டியை காமப் பார்வையில் விமர்சனம் செய்தது! நீ !உன் தாய், தந்தைக்கு பிறந்தாய் என்பதுதான் நற்செய்தி அவர்கள் எப்படி இணைந்தார்கள், தாய் எப்படி உன்னை பெற்றாள் என்பதை விளாவாரியாக விளக்குவது எவ்வளவு கேவலமோ அவ்வளவு கேவலம் கந்த சஷ்டியை நாகரிகம் இல்லாமல் விளக்கியது!

கருப்பர் கூட்டம் எனும் காட்டுமிராண்டி கூட்டம் கந்த சஷ்டியை தரக்குறைவாக விமரசனம் செய்தது மன்னிக்க முடியாத குற்றம்! சமீப காலமாக இந்து மதத்தையும், இந்துக் கடவுள்களையும் இழிவு படுத்தும் விதமாக பலர் பேசிவருகின்றனர்! ஒரு மதத்தின் நம்பிக்கையை சீர் குழைக்க எவருக்கும் உரிமை இல்லை! கருப்பர் கூட்டத்திற்கு மட்டுமல்ல, சில கள்ளக்கூட்டத்திற்கும் இதே வேலையாப்போச்சு. உண்மையான கடவுள் நம்பிக்கை உள்ளவன் தன் மதத்தை போற்றுவான்,பிற மதத்தை தூற்ற மாட்டான். அதேபோல் பிற மதத்தின் விஷயங்களில் தலையிடவும் மாட்டான்.

ஆனால் இன்று இந்து மத விவகாரங்களில் பிற மதத்தினர் ஆர்வம் காட்டுகின்றனர்! இதுவும் ஒரு ஈனச்செயல்! சாமியே இல்லை என்பவன்தான் இப்போ சாமியை எந்நேரமும் விமர்சனம் செய்து கொண்டிருக்கிறான். பொதுக் கழிப்பிடங்களில் சிலர் அசிங்கமான வார்த்தைகளை கேவலமான புத்தியோடு எழுதி வைப்பார்கள். அப்படிப்பட்ட புத்தி உள்ளவன்தான் கந்த சஷ்டி கவசத்தை நாகரிகமில்லாமல் விமர்சனம் செய்திருக்கிறான். இவர்கள் ஊளையிடுவது கொள்கையால் அல்ல

பணம் சம்பாதிப்பதற்காக! இவர்களுக்கு கொடுக்கும் தண்டனையில் இனி யாரும் இந்து மதத்தை மட்டுமல்ல, எந்த மதத்தையும் எவரும் கேவலமாக விமர்சனம் செய்யக் கூடாது” என்று பதிவிட்டுள்ளார்.

https://www.facebook.com/permalink.php?story_fbid=2665284440379507&id=100006939302971

 

Categories

Tech |