தமிழ் சினிமாவில் மெரினா படத்தின் மூலம் அறிமுகமானவர் சிவகார்த்திகேயன். இவர் கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஹிட் படங்களைத் தொடர்ந்து முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கி உள்ளார். இவர் நடிப்பில் வெளியான டாக்டர், டான் என்ற இரு படங்களும் மெகா ஹிட் அடித்தது. இவர் தற்போது பிரின்ஸ் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தை தெலுங்கு இயக்குனரான அனுதீப் இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படம் தீபாவளி பண்டிகை முன்னிட்டு வெளியாக உள்ளது.
இந்தப் படம் வழக்கமான சிவகார்த்திகேயன் படங்களைப் போலவே ஜாலியான காதல் படமாக உருவாகியுள்ளது. மேலும் இப்படத்தின் மூலம் சிவகார்த்திகேயன் நேரடியாக தெலுங்கில் அறிமுகம் ஆகிறார். இந்நிலையில் சீரியசான படங்களில் நடிப்பதை பற்றி சிவகார்த்திகேயனிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த சிவகார்த்திகேயன், ஒரு நடிகனாக அனைத்து ஜானரிலும் படங்களில் நடிக்க தான் விரும்புகிறேன். சீரியஸான படங்களிலும் விரைவில் நடிப்பேன். ஆனால் அனைத்து வகையான ரசிகர்களுக்கும் ஏற்ற படமாக இருக்க வேண்டும். மேலும் அப்படத்தை எந்த இயக்குனர் இயக்குகிறார் என்பது மிகவும் முக்கியமானது என்று தெரிவித்துள்ளார்.