Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திருமணம் ஆன 4 மாதத்தில் கருத்து வேறுபாடு… தூக்கில் தொங்கிய காதலி… கதறும் காதலன்..!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே காதல் திருமணம் செய்த நான்கு மாதங்களே ஆன நிலையில் பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி  மாவட்டம் திருச்செந்தூரை  சேர்ந்த பிரபாகரனும், வீரபாண்டிய பட்டினத்தை சேர்ந்த ஆஷாவும் வீட்டில்  பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்துள்ளனர். திருமணம் முடிந்த சில நாட்களிலேயே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் அடிக்கடி சண்டை போட்டு வந்ததாக கூறப்படுகிறது.

Related image

செவ்வாய்க்கிழமை வழக்கம் போல் வேலைக்கு சென்று பிரபாகரன் வீடு திரும்பி உள்ளார். அன்றைக்கு  இருவருக்கும் சண்டை நடந்ததால் ஆஷா அவசரப்பட்டு தூக்கில் தொங்கிய தற்கொலை செய்துள்ளார். இந்நிலையில் ஆஷாவின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக அவரது உறவினர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆஷாவின் இறப்பை தாங்க முடியாத  அவரது காதலன் கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

Categories

Tech |