அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் அந்நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டனை திடீரென பதவியை விட்டு நீக்கியுள்ளார்.
அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற பிறகு அந்நாட்டில் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பொறுப்பேற்ற மூன்றாவது நபர் போல்டன். அவர் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை விவகாரத்தில் டிரம்புக்கு போல்டன் ஆலோசனைகளை வழங்கி வந்தார். ஈரான் விவகாரத்தில் எடுத்த பல்வேறு அதிரடி முடிவுகளுக்கு போல்டனே காரணம். இந்த தீவிர நிலைப்பாட்டை வடகொரிய, ஆப்கானிஸ்தான், ரஷ்யா தொடர்பான விவகாரங்களில் அமெரிக்கா கடைபிடிக்க வேண்டும் என போல்டன் வலியுறுத்தி வந்தார்.
இதனால் டிரம்ப்புடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் டிரம்ப்பின் மிகவும் நம்பிக்கைக்குரியவராக கருதப்படும் வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் என்பவருடன் போல்டனுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பதவி விலகும் முடிவை போல்டன் கடந்த திங்கள்கிழமை இரவு தெரிவித்துள்ளார். அப்பொழுது செவ்வாய்க்கிழமை காலை பேசிக் கொள்ளலாம் என்று போல்டனிடம் கூறியுள்ளார்.
இந்நிலையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியை விட்டு நீக்குவதாக செவ்வாய்க்கிழமை திடீரென அறிவித்துள்ளார் டிரம்ப். இதைத்தொடர்ந்து போல்டனக்கு பதிலாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவிக்கு வடகொரிய விவகாரத்தை கையாள டிரம்பின் பிரதிநிதி ஸ்டீபெண் என்பவரது பெயர் அடிபடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.