தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் தாயார் மறைவிற்கு சீமான் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம், அரளிகோட்டையை சேர்ந்த தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் அவர்களின் தாயார் கருப்பாயி அம்மாள் உடல் நல குறைவு காரணமாக இன்று காலை உயிரிழந்தார். உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக திருப்பத்தூரில் வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 5 மணி அளவில் இறுதி சடங்குகள் நடைபெற உள்ளது. இவரது கணவன் ஏற்கனவே இறந்து விட்ட நிலையில் இவருக்கு ஒரே மகன் கே ஆர் பெரியகருப்பன் ஆவார். இவரது மறைவிற்கு கட்சியை சேர்ந்த பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் கருப்பாயி அம்மாள் மறைவிற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டதாவது: “தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐயா பெரிய கருப்பன் அவர்களது தாயார் கருப்பாயி அம்மாள் அவர்கள் மறைவுற்ற துயரச் செய்தி அறிந்து அதிர்ச்சியும், ஆழ்ந்த மன துயரம் அடைந்தேன். அம்மாவை இழந்து வாடும் அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆறுதல்களை தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்” என அவர் பதிவிட்டுள்ளார்.