அதிமுகவின் தகவல் தொழில் நுட்பப் பிரிவு கூண்டோடு கலைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தகவல் தொழில்நுட்ப செயலாளர், துணை நிர்வாகிகளாக இருந்தவர்கள் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அதிமுகவின் அனைத்து ஊரக கழக செயலாளர்கள் பொறுப்புகளும் இன்று முதல் ரத்து செய்யப்படுகின்றன. மேலும் இந்த தகவல் தொழில்நுட்ப பிரிவு 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
சென்னை, வேலூர், கோவை மற்றும் மதுரை என பிரிக்கப்பட்டுள்ளது. அதில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகியவை சென்னை மண்டலத்தில் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்கள் வேலூரில் அடங்கும்.
ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், உள்ளிட்டவை கோவை மண்டலத்தில் அடங்கும். மேலும் சேலம், நாமக்கல், கரூர், நாகை, திருவாரூர் உள்ளட்ட 12 மாவட்டங்கள் மதுரை மண்டலத்தில் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதிமுகவின் ஐடி பிரிவின் 4 மண்டலங்களுக்கான செயலாளர்களை நியமித்து ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் உத்தரவிட்டுள்ளனர். சென்னை மண்டலத்திற்கு அஸ்பயர் கே.சாமிநாதன், வேலூர் மண்டலத்திற்கு கோவை சத்யன், கோவை மண்டலத்திற்கு சிங்கை ஜி.ராமச்சந்திரன், மதுரை மண்டலத்திற்கு வி.வி.ஆர்.ராஜ் சத்யன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.