Categories
உலக செய்திகள்

2060 இல் காத்திருக்கிறது பேரழிவு… உலக நாடுகளுக்கு கோடீஸ்வரர் பில்கேட்ஸ் எச்சரிக்கை…!!

கொரோனாவை விட காலநிலை மாற்றம் மிகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என கோடீஸ்வரர் பில்கேட்ஸ் எச்சரித்துள்ளார். 

சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் இந்தக் கொடிய கொரோனா வைரஸ் கடந்த ஆறு மாதங்களாக பல்வேறு நாடுகளை பெரும் சிரமத்திற்கு ஆளாக்கி உள்ளது. மேலும் இந்த நோயை எப்படி விரட்டுவது? இதனை எவ்வாறு தடுப்பது? என்று பல்வேறு நாடுகளும் போராடி வருகிறது. நிபுணர்கள் கூற்றுப்படி இந்த கொரோனா தொற்றுக்கு ஒரே தீர்வு தடுப்பூசி மட்டும்தான்.. அதனால் தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் பிரிட்டானியா, ரஷ்யா, அமெரிக்கா போன்ற நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளன.

இதனால் விரைவில் தடுப்பூசி கிடைத்துவிடும் நாம் இயல்பு நிலைக்கு மாறி விடலாம் என்று மக்கள் நம்பிக்கையோடு காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் கொரோனா வைரஸை விட காலநிலை மாற்றத்தால் உருவாகும் ஆபத்து மிகப் பெரிய அளவில் இருக்கும் என மைக்ரோசாப்ட் இணை நிறுவனரும் உலக அளவில் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவருமான பில்கேட்ஸ் எச்சரித்திருக்கிறார். இந்த ஆண்டு முழுவதும் விதிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கார்பன்-டை-ஆக்சைடு வெளியீடு குறைந்துள்ளது என்பதை ஆய்வாளர்கள் கூற மறுக்கின்றனர். ஆனால் சர்வதேச எரிசக்தி நிறுவனம் 8 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவித்திருக்கிறது.

இதே போலவே ஒவ்வொரு வருடமும் இந்த குறைவு வேகத்தை நாம் தொடர்ந்தால் சிறந்த நிலையில் இருக்கலாம். ஆனால் துரதிர்ஷடவசமாக நம்மால் அதை செய்ய இயலாது. ஏனென்றால் இத்தகைய குறைவுக்கு முக்கிய காரணம் உலகம் முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கு தான். கடந்த ஏப்ரல் மாதம் முதல் கார், விமானம், வாகனங்கள், போக்குவரத்து போன்றவை முற்றிலும் நிறுத்தப்பட்டு இருப்பதால், காற்று மாசுபடுதல் தவிர்க்கப்பட்டுள்ளது. நாம் கார்பன்டை-ஆக்சைடு வெளியீட்டை கட்டுப்படுத்த தவறிவிட்டால் கொரோனாவுக்கு இணையான மற்றொரு பேரழிவை சந்திக்க நேரிடும். காலநிலை மாற்றத்தால் புவியின் வெப்பநிலை உயர்ந்து வருகிறது.

இப்படியே சென்றால் இன்னும் நாற்பது ஆண்டுகள், அதாவது 2060 ஆம் ஆண்டில் இதேபோன்று பேரழிவு ஏற்பட வாய்ப்புள்ளது. 2100ஆம் ஆண்டில் இந்த மதிப்பு 5 மடங்கு அதிகரித்திருக்கும்.. தற்போது கொரோனா தொற்றால் 1 லட்சத்துக்கு 14 பேர் என்ற  கணக்கில் உயிரிழப்பு நிகழ்கிறது. அதுவே காலநிலை மாற்றத்தால் அதிகபட்சமாக 1 லட்சத்துக்கு 73 உயிரிழப்பும், குறைந்தபட்சம் 1 லட்சத்திற்கு 10 பேர் வரையும் உயிரிழக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே காலநிலை மாற்றம் கொரோனாவை விட மிக மோசமான பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தும். இப்போது இருக்கும் ஆபத்து மிகப்பெரியது தான் என்றாலும், நாளைய ஆபத்து வராமல் அந்தந்த நாடுகள் பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும், அதற்கான வழிமுறைகளை திட்டமிடுதல் அவசியம் எனவும்  பில்கேட்ஸ் கூறியுள்ளார்.

Categories

Tech |