Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : தமிழகத்துக்கு பேரிழப்பு – முதல்வர் இரங்கல் …..!!

திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சரும் , மூத்த அரசியல்வாதியும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் அன்பழகன் அவர்கள் உடல் நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார் இதையடுத்து தொடர்ச்சியாக அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வரும் நிலையில் தமிழக முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பேச்சாளர் ,  பேராசிரியர் அன்பழகன் இறப்பு தமிழ் நாட்டிற்கே பேரிழப்பு ஆகும். கலைஞர் கருணாநிதி அவர்களின் அரசியல் பயணத்தில் நெடுகிலும்  உற்ற தோழனாகவும், திராவிட இயக்கத்தின் கொள்கையிலிருந்து விலகாத மூத்த அரசியல்வாதிகளில் ஒருவர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆரம்ப காலம் முதலே முக்கிய பங்கு வகித்தவர் என்ற பெயரை பெற்றவர் பேராசிரியர் க அன்பழகன்.

Image result for EDAPPADI PALANISAMY

1957ம் ஆண்டு முதல் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட்டு தமிழக சட்டமன்றப் பேரவையில் அடியெடுத்து வைத்தவர். 43 ஆண்டுகளாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராகவும் , அரை நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக தமிழ்நாட்டு அரசியல் இருந்த  பெருமைக்குரியவர் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.

ஒன்பது முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட முதலவர் அமைச்சர் , நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆகிய பணிகளில் திறம்பட பணியாற்றினார் என்றும் தமிழக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

அரசியல்வாதி , ஆசிரியர் , மேடைப் பேச்சாளர் , எழுத்தாளர் , தொழிற்சங்கவாதி , சமூக சீர்திருத்தவாதி என்ற பல பரிமாணங்களைக் கொண்டு  தனது பன்முகத் தன்மையை வெளிப்படுத்தியவர் பேராசிரியர் அன்பழகன் இழப்பு தமிழகத்திற்கே பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் , திராவிட முன்னேற்ற கழகத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் , அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாக தமிழக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |