Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ஒழுங்கா கட்டல….. குட்டி போட்ட வட்டி….. ரூ1,10,00,000….. வீட்ட காலிபண்ணுங்க….. பேங்க் நோட்டீஸ்….!!

திருப்பூர் அருகே வட்டியை ஒழுங்காக கட்டாததால் வீடு, குடோன் உட்பட 71 சென்ட் நிலத்தை விசைத்தறி வியாபாரியிடம் இருந்து வங்கி ஊழியர்கள் ஜப்தி செய்து உள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள சின்னிய கவுண்டன் பாளையத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன். இவர் விசைத்தறி வியாபாரி ஆவார். விசைத்தறி கூடம் அமைப்பதற்காக கடந்த 2011ஆம் ஆண்டு அவருடைய வீடு மற்றும் விசைத்தறி குடோன் உள்ளிட்ட 71 சென்ட் நிலத்தை பாங்க் ஆப் இந்தியா வங்கியில் அடமானம் வைத்து ரூபாய் ஒரு கோடிய 3லட்சம்  கடனாகப் பெற்றார்.

இதையடுத்து முறையாக வட்டியை செலுத்திவந்த அவரால் 2015 ஆம் ஆண்டுக்கு மேல் அதனை செலுத்த முடியவில்லை. அதை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டு வேறு வேலை பார்க்க ஆரம்பித்துவிட்டார் ஈஸ்வரன். இதனால் ரூபாய் 65 லட்சம் மட்டுமே பாக்கி இருந்த வங்கி கடன் தற்போது ஒரு கோடியே 10 லட்சத்தை தாண்டிவிட்டது.

இதனை கட்டக்கோரி வங்கி நோட்டீஸ் அனுப்ப அவர் கலெக்டர் அலுவலகத்தில் முறையிட, அடமானம் வைத்த பத்திரத்தை வங்கி முறையாக கலெக்டர் அலுவலகத்தில் காண்பித்து ஜப்தி  செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவு வாங்கியது. அதன்படி அவரது 71 சென்ட் நிலம் ரூ 91 லட்சத்துக்கு ஏலத்தில் விற்கப்பட வங்கி ஊழியர்கள் ஜப்தி செய்வதற்காக நேரில் சென்றனர்.

அப்போது மனமுடைந்து காணப்பட்ட ஈஸ்வரன் தனது குடும்பத்தினருடன் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார். அப்போது பெண் காவல் துறை அதிகாரிகள் அங்கிருந்த குடங்களில் உள்ள நீரை அவர் மீது ஊற்றி ஈஸ்வரன் உட்பட அவர் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை காப்பாற்றினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |