Categories
தேசிய செய்திகள்

BREAKING: ”சீனர்களுக்கு இ-விசா வசதி நிறுத்திவைப்பு” மத்திய அரசு நடவடிக்கை …!!

சீனாவில் இருந்து இந்தியாவுக்கு வருபவர்களுக்கு இந்தியா வழங்கி வந்த இ-விசா வசதி நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது.

சீனாவில் பெரிய அளவிலான பாதிப்பை சந்தித்து வருகின்றது. கொரோனா வைரஸ் சீனாவின் மொத்த பகுதிக்கும் பரவி இருப்பதாகவும் தகவல்கள் சொல்லப்படுகின்றது. அதனால் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு கொரோனா வைரஸ் பாதிப்பு பரவி வருகின்றது.சீனாவில் தங்கி இருந்து இந்தியா வந்த இரண்டு பேருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகியிருக்கிறது.

தற்போது  ஏராளமானோர் இந்தியாவிற்கு வருவதற்கான வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகின்றது. குறிப்பாக இந்தியாவில் மருத்துவ வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் தாராளமாக இருக்கக் கூடிய சூழ்நிலையில் சாதாரணமாகவே இந்தியாவிற்கு மருத்துவ வசதிகளுக்காக வரக்கூடிய வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை மிக அதிகம்.

சீனாவில் இருந்து சீனா குடிமக்கள் மற்றும் சீனாவில் தங்கி இருக்க கூடிய வெளிநாட்டவர்கள் இந்தியாவிற்கு வரக்கூடிய இ-விசா முறையை தற்போது தற்காலிகமாக மத்திய அரசு நிறுத்தி வைத்திருக்க முடிவு எடுத்துள்ளது. கொரோனா நோய் தொற்று பரவாமல் இருக்க அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |