மதுக்கடைகளில் நாளொன்றுக்கு 500 டோக்கன்கள் மட்டுமே வழங்க முடிவு செய்துள்ளோம் என்று உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் மனு தாக்கல் செய்திருக்கிறது.
தமிழகத்தில் 7,8ஆம் தேதி டாஸ்மாக் மதுக்கடைகளில் நீதிமன்றம் விதித்த உத்தரவுகள் பின்பற்றப்பட வில்லை என்பதால் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடக் கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் பொது முடக்கம் முடியும் வரை டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்திருந்தது. ஆன்லைன் மூலமாக மது விற்பனை செய்யலாம் என்ற தகவலையும் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் ஆன்லைன் மூலம் மது வழங்க உத்தரவிடக்கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருக்கின்றன. இந்நிலையில் தமிழக டாஸ்மாக் நிர்வாகம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது அதில், மதுக்கடைகளில் நாளொன்றுக்கு 500 டோக்கன் மட்டுமே வழங்க முடிவு செய்திருப்பதாக இருக்கின்றோம். எனவே மதுக்கடைகளை திறப்பது எதிராக தொடுக்கப்பட்ட அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.