Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“பள்ளி செல்லாத குழந்தைகள் கண்டறியும் பணி”…. தூத்துக்குடியில் 4 பேர் மீண்டும் பள்ளியில் சேர்ப்பு….!!!!!

பள்ளி செல்லாத குழந்தைகள் நான்கு பேரை மீட்டு பள்ளியில் சேர்க்கும் நடவடிக்கையை அதிகாரிகள் மேற்கொண்டார்கள்.

தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பால தண்டாயுதபாணி அறிவுரையின்படி உதவி திட்ட அலுவலர், மாவட்ட பள்ளி செல்லா குழந்தைகள் ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்டோரின் ஆலோசனையின் பேரில் கருங்குளம் யூனியன் பகுதிகளில் பள்ளி செல்லாத குழந்தைகள் கண்டறியும் பணி நடைபெற்றது.

இதற்கு மாவட்ட உதவி திட்ட அலுவலர் முனியசாமி, ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் தலைமை தாங்க கிராம நிர்வாக அலுவலர் ஸ்டீபன் கென்னடி, போலீசார், கருங்குளம் வட்டார கல்வி அலுவலர் செல்வகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் மற்றும் ஆசிரியர்கள் அடங்கிய குழுவினர் வீதி வீதியாக சென்று ஆய்வு மேற்கொண்டார்கள். இதில் நான்கு மாணவ-மாணவிகள் பள்ளி படிப்பை பாதியிலேயே நிறுத்தியது தெரிய வந்தது. இதனால் அதிகாரிகள் நான்கு மாணவ-மாணவிகளையும் மீட்டு பள்ளியில் சேரும் நடவடிக்கையை மேற்கொண்டார்கள்.

Categories

Tech |