Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

நோய்களை கட்டுப்படுத்தும் வேம்பு… இதில் எவ்வளவு பயன்கள்..!!

வேப்பிலையை தினசரி நாம் உபயோகப்படுத்துவதன் மூலம் என்னென்ன நன்மைகள் நமக்கு கிடைக்கின்றது என்பதைப் பற்றி இந்தத் தொகுப்பில் பார்ப்போம்.

வேப்பிலை ஒரு கிருமி நாசினி பொருள். பாரம்பரிய மருத்துவ உலகில் வேப்பிலை மிகவும் பிரபலமானது. இது மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்த ஓர் அற்புதமான இலை. இந்த இலைகளைக் கொண்டு பல்வேறு அபாயகரமான நோய்களையும் சரிசெய்ய முடியும். பெரும்பாலும் ஆயுர்வேத மருத்துவத்தில் நோய்களைக் குணப்படுத்துவதற்கு வேப்பிலை முக்கிய பொருளாக பயன்படுத்தப்படுகிறது.

வேப்பிலையின் நன்மைகள்:

வேப்பிலையில் நார்ச்சத்து, மாவுச்சத்து, புரதச்சத்து, 10 வித அமினோ அமிலங்கள் உள்ளன.

வேப்பிலையை அரைத்து முகப்பரு உள்ள இடத்தில் பூசினால் வெகு விரைவில் முகப்பரு மறைந்துவிடும்.

வேப்பிலையை காலையில் டீயுடன் சேர்த்து அருந்திவர சாதாரண சளி, இருமல் குறையும்.

வேப்பிலையை பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிட சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும்.

Categories

Tech |