Categories
தேசிய செய்திகள்

”பாஜகவுக்கு சூனியம் வச்சுட்டாங்க” கலங்கிய பாஜக MP …!!

பாஜக மீது எதிர் கட்சிகள் தீய சக்தியை ஏவி விட்டுள்ளதாக போபால் MP பேசியது சர்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஒரு ஆண்டில் பாஜகவின் முக்கிய , மூத்த தலைவர்கள் மரணடைந்துள்ளனர். பாஜகவினரின் இந்த மரணம் நாடு முழுவதும் உள்ள அவர்களின் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக முன்னாள் பிரதமர் வாஜ்பாய் , மத்திய அமைச்சர்கள் மனோகர் பாரிக்கர் , சுஷ்மா ஸ்வராஜ் , அருண் ஜெட்லி ஆகிய முக்கிய தலைவர்கள் இறந்துள்ளனர்.

Image result for BJP MP Prakashing Thakur

பாஜகவின் அடுத்தடுத்து மரணங்கள் ஏற்படுவதால் போபால் பாஜக எம்பி பிரக்யாசிங் தாகூர் கூறியது சர்சையை ஏற்படுத்தியுள்ளது.அவர் பாஜகவின் தலைவர்கள் மரணமடைவதற்கு காரணம் எதிர்க்கட்சிகள் பாஜகவின் மீது தீயசக்தியை ஏவி விட்டுள்ளதாக சாது ஒருவர் எனக்கு எச்சரிக்கை விடுத்தார் என்று கூறியுள்ளார்.MP_யின் இந்த கருத்தை பலரும் விமர்சித்துள்ளனர்.

Categories

Tech |