அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பெரம்பலூர் நகர்ப்பகுதியில் நேற்று டிரோன் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றுள்ளது.
கொரோனாவினால் பெரம்பலூர் நகர் பகுதியில் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதன் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. மேலும் முழுவீச்சில் தொற்று பரவலை கட்டுப்படுத்த போராடி வருகிறது.
அந்த வகையில் நேற்று டிரோன் மூலம் பெரம்பலூர் நகராட்சி சார்பில் நகர்ப்பகுதியில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தொடங்கியது. மேலும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையிலும் கிருமிநாசினி ட்ரோன் மூலம் தெளிக்கப்பட்டுள்ளது.