ஜம்மு – காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை எதிர்த்து பலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். காங்கிரஸ் மூத்தத் தலைவர் குலாம் நபி ஆசாத் சார்பாக வழக்கில் ஆஜராகிய கபில் சிபல், மத்திய அரசின் நடவடிக்கையால் 70 லட்சம் மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டது, இதுபோல் சுதந்திர இந்தியாவில் நடந்ததில்லை” எனத் தெரிவித்தார்.
1970களில் எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டபோது என்ன நடந்தது என நீதிபதி ரமணா கேள்வி எழுப்பினார். அப்போதுகூட அடிப்படை உரிமைகள் இந்தளவுக்கு பாதிக்கப்படவில்லை, 144 தடை உத்தரவால் மூன்று மாதங்கள் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. மாநில அரசால் அடிப்படை உரிமைகளை பறிக்கமுடியாது. வர்த்தகத்தை அரசால் எடுத்துக் கொள்ள முடியும். ஆனால், வர்த்தகத்தை அழிக்கக் கூடாது என கபில் சிபல் தெரிவித்தார்.