Categories
உலக செய்திகள்

பணியில் 8 வருடங்களாக தூங்கிய காவலர்…. திடீர் ஆய்வில் வெளிவந்த உண்மை…. சிறை நிர்வாகத்தின் அதிரடி உத்தரவு….!!

சுவிட்சர்லாந்தில் இரவு நேர பணியில் பொறுப்பேற்று சுமார் 8 ஆண்டுகளாக தூங்கிய காவலர் ஒருவரை சிறை நிர்வாகம் பணி நீக்கம் செய்துள்ளது.

சுவிட்சர்லாந்தில் வலைஸ் என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் Cretelongue என்னும் சிறையில் இரவு நேரம் பணியில் காவலர் ஒருவர் பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் இவரும், சக ஊழியரும் சுமார் 8 ஆண்டுகள் செய்ததுபோல சம்பவத்தன்றும் இரவு நேர பணியில் தூங்கிக் கொண்டிருந்துள்ளார்கள். அப்போது திடீரென 3 துறை சார்ந்த அதிகாரிகள் அந்த சிறையில் ஆய்வுக்கு சென்றுள்ளார்கள்.

அந்த ஆய்வின் போது காவலரது இந்த செயல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதனையடுத்து இவர்கள் 2 பேர் மீதும் சிறை நிர்வாகம் எந்த விதமான முன்னெச்சரிக்கையுமின்றி பணி நீக்க உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த பணி நீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த காவலர்கள் நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கை தொடர்ந்துள்ளார். ஆனால் இதனை விசாரித்த பெடரல் நீதிமன்றமும் காவலர்கள் 2 பேரையும் பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |