Categories
உலக செய்திகள்

பயணிகளின் உயிருக்கே ஆபத்து..! இளைஞர் செய்த குளறுபடி… பிரபல நாட்டில் பரபரப்பு..!!

சுவிட்சர்லாந்தில் பயணிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக நூற்றுக்கணக்கான ரயில்களில் குளறுபடி செய்த இளைஞர் குறித்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுவிட்சர்லாந்தில் ரயில்வே ஊழியர்கள் பலரும் ரயில்களின் பிரேக்குகளில் பழுது இருப்பதாக புகார் அளித்து வந்துள்ளனர். இதையடுத்து அனைத்து ரயில்களும் சரி செய்யப்பட்டு சோதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பணிமனைக்கு வரும் ரயில்களில் 26 வயது ஊழியர் ஒருவர் கோளாறு உள்ள பிரேக்குகளை நல்ல பிரேக்குகள் என்று கூறி சான்றிதழ் வழங்கியுள்ளார். அதனை நம்பி பயணிகள் ரயில்களில் அந்தப் பிரேக்குகளும் பொருத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த இளைஞர் பல மாதங்களாக செய்து வந்ததால் சுமார் நூற்றுக்கணக்கான ரயில்களின் பிரேக்குகளில் பழுது இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அவசரத்திற்கு ரயில்களில் பிரேக் பிடிக்க நேரிட்டால் ரயில் நிற்காமல் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே அந்த இளைஞர் பயணிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக செய்த செயல் காரணமாக பணியை விட்டு நீக்கப்பட்டார். இதையடுத்து பெடரல் நிர்வாக நீதிமன்றம் வேண்டுமென்றே ரயில் பிரேக்குகளில் அந்த இளைஞர் கோளாறு ஏற்படுத்தினார் என்ற வாதத்தினை ஏற்றுக்கொண்டுள்ளது.

Categories

Tech |