கிராம நிர்வாக அதிகாரி பணியிடை நீக்கம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அல்லம்பட்டி கிராம நிர்வாக அதிகாரியாக மாரியப்பன் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டில் மாரியப்பன் மீது சக பெண் அதிகாரி விசாக கமிட்டியில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் விசாரணை நடத்திய விசாகா கமிட்டி அதிகாரிகள் மாரியப்பனை பணியிடை நீக்கம் செய்யுமாறு பரிந்துரை செய்துள்ளனர்.
அந்தப் பரிந்துரையை ஏற்று மாவட்ட நிர்வாகம் மாரியப்பனை பணியிடை நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து மாரியப்பனை பணியிடை நீக்கம் செய்வதற்கான உத்தரவு நகலை அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ. வான கல்யாண்குமார் என்பவர் வழங்கியுள்ளார்.