Categories
மாநில செய்திகள்

ஆயுதம் எடுக்கும் முன் அப்புறப்படுத்துங்கள் – எச்.ராஜா ட்வீட் …!!

CAA போராட்டத்தில் ஆயுதங்கள் வருமுன் இவர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்ட வேண்டுமென்று  பாஜகவின் தேசிய செயலாளர் ட்வீட் செய்துள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் நடைபெற்ற போராட்டத்திற்கு எதிராகவும் , குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும் நடைபெற்ற போராட்டத்தில் இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் முற்றி  வன்முறையாக மாறியது.  இதில் தலைமைக்காவலர் ரத்தன் லால் உள்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பல பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுவரை  வன்முறையில் காயமடைந்த 200க்கும் அதிகமானோர் ஜிடிபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த வன்முறை தொடர்பாக 11  FIR பதிவு செய்யப்பட்டுள்ளதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.டெல்லி சட்டஒழுங்கை கண்காணிக்க சிறப்பு காவல் ஆணையராக ஐபிஎஸ் அதிகாரி ஸ்ரீவத்சவா நியமிக்கப்பட்டார். பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என ஒலிப்பெருக்கியில் அறிவுறுத்தி வருகின்றனர்.

 

இந்நிலையில் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா தனது ட்வீட்டர் பக்கத்தில் டெல்லியியை போல தமிழ்நாட்டிலும் நடக்கும் என்று பதிவிட்டுள்ளார். அதில் , கடந்த 2 நாட்களாக டெல்லியில் நடப்பது வண்ணாரப்பேட்டையில் , தமிழகத்திலும் ஏற்படலாம். வண்ணாரப்பேட்டையிலும் முஸ்லீம் பெண்கள் காவல்துறையினர் மீது கற்களையும் , செருப்புக் களையும் வீசினார்கள் என்று சட்டமன்றத்தில் கூறினார்கள். ஆயுதங்கள் வருமுன் இவர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்ட வேண்டுமென்று பதிவிட்டுள்ளார்.

 

 

 

Categories

Tech |