கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெரியகுப்பம் ரயில்வே குடியிருப்பு பகுதியில் அசோக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு தேன்மொழி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கின்றது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் தனது பெற்றோரிடம் இதுகுறித்து தேன்மொழி தெரிவித்து அழுதுள்ளார்.
இதனையடுத்து மன உளைச்சலில் இருந்த தேன்மொழி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த திருவள்ளூர் டவுன் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.