Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கஞ்சா போதையில் தகராறு…. இளைஞர் கொலை…. ஒரே நாளில்…. 2 சம்பவம்…..!!

திருச்சியில் கஞ்சா போதையில் நண்பனை கழுத்து அறுத்து கொலை செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள்.

 திருச்சியில் ஒரே நாளில் நடந்த இரண்டு கொலை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது  அப்பகுதியில் உள்ள கழிவறையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்த இளைஞரை காவல்துறையினர் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதில்,

இறந்தவர்  தில்லை நகரைச் சேர்ந்த முகமது இசாக் என்றும், நண்பர்களுக்கு இடையே கஞ்சா போதையில் ஏற்பட்ட தகராறில் சக நண்பரால் முகமது கொல்லப்பட்டார் என்பதும் தெரிய வந்தது. இந்த வழக்கில் அதே  பகுதியை சேர்ந்த மணி என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நேற்று காலை பாஜக பிரமுகர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில் அன்று இரவே இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |