Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கணவனுடன் சண்டை… மரத்தில் சடலமாக தொங்கிய மனைவி…கொலையா? போலீசார் விசாரணை..!!

வடமாநிலத்தை சேர்ந்த பெண் மரத்தில் சடலமாக தொங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் ஆரல்வாய்மொழி அருகே ஆள் நடமாட்டம் இல்லாத மலைப் பகுதியில் இருந்த மரம் ஒன்றில் பெண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனை இளைஞர் ஒருவர் அவ்வழியாக சென்ற போது பார்த்து ஆரல்வாய்மொழி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த காவல்துறையினர் பெண்ணின் உடலை மீட்டு விசாரணை மேற்கொள்ள தொடங்கினர். மரத்தின் அருகே மது பாட்டில்கள் கிடந்துள்ளது.

காவல்துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் தூக்கில் தொங்கியது வடமாநிலத்தை சேர்ந்த ராணி என்ற பெண் என்பதும் அவரது கணவர் ராமன் மற்றும் இத்தம்பதியினருக்கு ஒன்றரை வயதில் குழந்தை இருப்பதும் தெரியவந்துள்ளது. இவர்கள் அருகில் இருந்த செங்கல் சூளையில்  தங்கியிருந்து பணிபுரிந்து வந்துள்ளனர். இன்று காலை கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு ராணியின் கணவன் ராமன் பொருட்கள் வாங்குவதற்காக சந்தைக்கு சென்று விட்டார்.

அதன் பிறகு அவர் வீடு திரும்பியபோது ராணி வீட்டில் இல்லை. இருவருக்கு இடையே பிரச்சனை இருந்ததால் ராணி தற்கொலை செய்திருக்கலாம் என்று காவல்துறையினர் முதலில் முடிவு செய்தனர். ஆனால் அவர் சடலமாக தொங்கிய மரம் உயரமாக இருந்ததால் அதில் ராணி எப்படி சேலையை கட்டி தூக்கு மாட்டி இருப்பார் என்ற சந்தேகம் காவல்துறையினருக்கு எழுந்துள்ளது. அதோடு மரத்தின் அருகே மது பாட்டில்கள் கிடப்பதால் ராணி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Categories

Tech |