Categories
உலக செய்திகள்

“இதெல்லாம் தேவையில்லை!”…. தேர்தல் ஆணையங்களை கலைத்த தலீபான்கள்…..!!

ஆப்கானிஸ்தான் நாட்டின் இரண்டு தேர்தல் ஆணையங்களை கலைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டில் இடைக்கால ஆட்சி நடத்திவரும் தலிபான்கள் 2 தேர்தல் ஆணையங்களை கலைத்ததோடு அமைதி மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சகங்களையும் கலைத்துள்ளனர். இது தொடர்பில் தலிபான் ஆட்சியின் துணை செய்தி தொடர்பாளரான பிலால் கரிமீ நேற்று தெரிவித்திருப்பதாவது, தேர்தல் ஆணையம் மற்றும் தேர்தல் முறையீட்டு ஆணையம், தனி அதிகாரத்தில் இயங்கி வந்ததால் அவை கலைக்கப்படுகிறது.

நாட்டில், தற்போதைக்கு அந்த ஆணையங்கள் தேவை இல்லை. எனவே அவை கலைக்கப்படுகிறது. வருங்காலத்தில் அவை தேவைப்படும் பட்சத்தில் மீண்டும் தொடங்கப்படும். மேலும், அமைதிக்கான அமைச்சகமும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சகமும் கலைக்கப்படுகிறது.

இவ்விரு அமைச்சகங்களும், தற்போதைய ஆட்சிக்கு தேவையில்லை என்று கூறியிருக்கிறார். மேலும், இதற்கு முன்பு மகளிர் விவகாரத்துறை அமைச்சகத்தையும் தலிபான்கள் கலைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |