Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: தொலைதூர கல்வி – ‘ ஆசிரியராக தகுதியில்லை’ – ஐகோர்ட் பரபரப்பு உத்தரவு…!!

தொலைதூரக் கல்வி முறையில் படித்தவர்கள் ஆசிரியர்கள் பணிக்கு தகுதியானவர்கள் அல்ல என்றும் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து கூறியுள்ளது. தற்போது ஆசிரியர்களாக உள்ள பலர் கல்லூரிகளுக்கு நேரடியாக சென்று படிக்காதவர்களாக இருக்கிறார்கள் என்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் குறிப்பிட்டு காட்டியுள்ளனர்.

கல்வி நிறுவனங்களுக்கு நேரில் சென்று பயின்றவர்களை ஆசிரியர்களாக நியமனம் செய்யும் வகையில் நடைமுறையை மாற்ற வேண்டும் என்ற அறிவுறுத்தி இருக்கிறது உயர்நீதிமன்றம். கல்வி நிறுவனங்களுக்கு நேரில் சென்று படித்தவர்களை ஆசிரியர்களாக நியமிக்கும் வகையில் நியமன நடைமுறையை மூன்று மாதங்களில் மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் வழங்கி உள்ளது.

ஆசிரியர்களாக உள்ள பெரும்பாலானோர் கல்லூரிகளுக்கு நேரடியாக சென்று படிக்காதவர்களாகவே இருப்பது துரதிஷ்டவசமானது என்றும் நீதிமன்றம் கருத்து கூறியுள்ளது. மேலும் கல்வி நிறுவனங்களில் நேரடியாக சென்று பயின்றவர்களை ஆசிரியர்களாக நியமிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதற்காக நடைமுறையை மாற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இந்த ஒரு உத்தரவை பிறப்பித்திருக்கிறது.

Categories

Tech |