Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

எவ்ளோ சொன்னாலும் திருந்த மாட்டாங்க… பார்த்ததும் தப்பிச்சென்ற வாலிபர்கள்… வலை வீசி தேடும் போலீசார்..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் சாராயம் காயச்சி கொண்டிருந்த 7 பேரில் 5  பேர் காவல் துறையினரை பார்த்ததும் தப்பிச்சென்றுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கந்தர்வகோட்டை பகுதிகளில் சாராயம் காய்ச்சப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்ட போது அப்பகுதியில் 7 பேர் சாராயம் காய்ச்சி கொண்டிருந்ததை கண்டுப்பிடித்துள்ளனர். இதனையடுத்து காவல் துறையினரை கண்டதும் 5 பேர் தப்பி ஓடியுள்ளனர்.

அப்போது 2 பேரை கைது செய்த காவல் துறையினர் அவர்களிடம் விசாரணை செய்த போது  கல்லுப்பட்டியை  சேர்ந்த கலியராஜ் மற்றும் தங்கமுத்து என்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த காவல் துறையினர் அவர்களிடமிருந்த 10 லிட்டர் சாராயம் மற்றும் சாராயம் காய்ச்சுவதற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் அனைத்தையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் தப்பி சென்ற 5 பேரை காவல் துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |