Categories
மாநில செய்திகள்

தொடங்கியாச்சு… இந்த மாத ரேஷன் பொருட்கள் விநியோகம்…!!

ரேஷன் கடைகளில் இன்று முதல் இந்த மாத ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்படுகிறது.

கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட அரசு பல்வேறு விதிமுறைகளை விதித்து நடைமுறைப்படுத்தி வருகிறது. அந்த வகையில் சென்ற மாதம் 29 ல் தொடங்கி 1 ஆம் தேதி வரை ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்குவதற்காக டோக்கன்கள் கடை பணியாளர்கள் மூலம் வழங்கப்பட்டு வந்தன.

அந்த டோக்கன்களுக்கான ரேஷன் பொருட்கள் இன்று முதல் விநியோகம் செய்யப்படும் என அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடைகளில் பொருட்கள் வாங்குவதற்கு முன்பாக மக்கள் கட்டாயமாக முக கவசம் அணிந்து இருக்கவேண்டும், தனிநபர் இடைவெளியைப் பின்பற்ற வேண்டும், என அரசு வலியுறுத்தி உள்ளது. குடும்ப அட்டைதாரர்கள் ஒருவர் மட்டுமே வந்து பொருட்களை வாங்கிச் செல்லுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Categories

Tech |