Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வாக்காளர் அட்டையில் திருத்தம்…. மும்முரமாக நடந்த பணி…. ஆட்சியர் ஆய்வு….!!

தோவாளை பகுதியில் வாக்காளர் பட்டியலில் உள்ள திருத்தங்கள் உள்ளிட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் அரவிந்த் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியின் கீழ் வரும் பைப்புவிளை  வாட்டர் டேங்க் ரோடு அம்பேத்கர் காலனி கிருஷ்ணன் கோயில் மற்றும் தோவாளை தாலுகா ஆகிய பகுதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் திருத்துதல் சேர்த்தல் அடையாள அட்டை சரிபார்த்தல் முகவரி மாற்றுதல் ஆகிய பணிகள் நடைபெற்றது இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் அரவிந்த் நேரில் சென்று ஆய்வு செய்தார்.மேலும் ராஜாக்கமங்கலம் பகுதியின் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திலும் கலந்து கொண்டார்.

பசுமை வீடு திட்டம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் யூனியன் பகுதிகளில் நடைபெறும் ஜல் ஜீவன் மிஷன் திட்டம் ஆகிய பல்வேறு திட்டங்களை குறித்து அதிகாரிகள் மற்றும் பஞ்சாயத்து தலைவர்கள் ஆகியோருடன் கலந்தாலோசித்தார்.இந்நிகழ்ச்சியின் போது ராஜமங்கலம் யூனியன் தலைவர் ஐயப்பன், செயற்பொறியாளர் ஏழிசை செல்வி, தேர்தல் துணை தாசில்தார்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Categories

Tech |