Categories
ஈரோடு மாநில செய்திகள்

தீவிரமடையும் 144….. இனி வாரத்தில் 3 நாட்கள் விடுமுறை…… மாவட்ட ஆட்சியர் அதிரடி….!!

ஈரோட்டில் இனி வாரத்திற்கு 3 நாட்கள் காய்கறி மளிகை கடைகள் செயல்படடாது என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே தங்களது வீடுகளை விட்டு வெளியே வரக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதிலும் பல்வேறு மாவட்டங்களில் மேலும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி,

ஈரோடு மாவட்டத்தில் அம்மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஈரோடு மாவட்டத்தில் ஏற்கனவே தினமும் காலை 6 மணி முதல் பகல் 11 மணி வரை மட்டுமே காய்கறி மளிகை கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வந்தன. அதிலும், ஒருசில இடங்களில் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றனர்.

இதனால் அவ்வப்போது சமூக இடைவெளியையும் கடைபிடிக்க மக்கள் மறுக்கின்றனர். அதேபோல் காய்கறி மளிகை பொருட்கள் வாங்க வேண்டும் என்று ஏதாவது ஒரு காரணம் கூறி வீட்டை விட்டு வெளியே மக்கள் வந்த வண்ணம் உள்ளனர். ஆகையால் இதனை தடுக்கும் வகையில் இனி வாரத்தில் மூன்று நாட்கள் மட்டும் காய்கறி மளிகை கடைகளுக்கு விடுமுறை அளிக்க மாவட்ட ஆட்சியர் முடிவு செய்துள்ளார். அதன்படி, ஞாயிறு, புதன், வெள்ளி ஆகிய கிழமைகளில் கடைகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |