தமிழகத்தில் தேசிய அளவில் ஈட் ரைட் கேம்பஸ் சான்றுதழை 13 அங்கன்வாடிக்கு கலெக்டர் ஆர்த்தி வழங்கியுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தின் கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு மையக் கூட்ட அரங்கில் மருந்து நீர்வளத்துறை சார்பாகவும், உணவு பாதுகாப்பு குறித்தும் கலெக்டர் ஆர்த்தி தலைமையில் பல துறைகள் சார்ந்த உணவு வணிகர்கள் மற்றும் அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் இம்மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் வேலை பார்க்கும் பணியாளர்கள் அங்கே வரும் குழந்தைகளுக்கு தரமான மற்றும் சத்தான உணவுகளை வழங்கி வருகின்றனர்.
பின்னர் அவ்விடங்களை சுகாதாரமாக வைத்துக் கொண்டதிற்காக இம்மாவட்டத்தில் அமைந்திருக்கும் 25 அங்கன்வாடி மையங்களை தணிக்கை செய்து அதிலிருந்து 13 அங்கன்வாடி மையங்களை தேர்வு செய்துள்ளனர். இதில் கீழ்படப்பை அங்கன்வாடி மையத்திற்கு மிகச்சிறந்த ஈட் ரைட் கேம்பஸ் தகுதி சான்றிதழும் மீதி 12 அங்கன்வாடி மையங்களுக்கு சிறந்த ஈட் ரைட் கேம்பஸ் சான்றிதழ்களை கலெக்டர் ஆர்த்தி வழங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து தேசிய அளவில் தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு மட்டும் தான் 13 அங்கன்வாடி மையங்களுக்கு ஈட் ரைட் கேம்பஸ் தகுதி சான்றிதழ் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.