நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட ஆட்சியர் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சித்திட்ட பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற ஸ்ரேயா சிங் மாவட்டத்தில் பகுதிகளுக்கு சென்று ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றார். இந்நிலையில் நேற்று பரமத்திவேலூர் நகராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை நேரில் ஆய்வு செய்துள்ளார். இதனையடுத்து வளம் மீட்பு பூங்காவில் அமையவுள்ள மட்கும் குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்கும் எந்திரம் அமைக்கும் இடத்தையும், அதன் கட்டுமான பணிகளையும் பார்வையிட்டுள்ளார்.
இதனைத்தொடர்ந்து உழவர்பட்டியில் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடு கட்டுமான பணிகளையும் பார்வையிட்டு வீடுகள் தரமாக இருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். மேலும் பரமத்திவேலூர் பகுதியில் கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுமான பணிகளையும் ஆய்வு செய்துள்ளார். இந்த ஆய்வில் பரமத்திவேலூர் தாசில்தார் சுந்தரவல்லி, பேரூராட்சி செயல் அலுவலர்கள் சுப்பிரமணியம், பாலசுப்பிரமணியம், துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாரணவீரன் மற்றும் அதிகாரிகள் பலரும் பங்கேற்றுள்ளனர்.