Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“அனுமதியின்றி பேனர் வைப்போர் கைது ” ஆட்சியர் வீரராகவராவ் அதிரடி.!!

அனுமதியின்றி பேனர் வைப்போர் கைது செய்யப்படுவர் என்று ராமநாதபுர மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் அனுமதியின்றி பேனர் வைப்போர் கைது செய்யப்படுவர் என்று அம்மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார். மேலும் அனுமதிபெறாத பேனர்களை அகற்றவும், விதி மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கவும் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும்  உத்தரவிட்டுள்ளார் .

Image result for பேனர்

முன்னதாக  சென்னை குரோம்பேட்டையை  சேர்ந்த  இளம்பெண் சுபஸ்ரீ (வயது 23) என்ற ஒரு பொறியியல் பட்டதாரி கந்தன்சாவடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து விட்டு பணி முடிந்து  பள்ளிக்கரணை வழியாக சாலையில் பைக்கில் சென்றபோது சாலையின் நடுவேதிருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர்  ஒன்று சுபஸ்ரீ மீது விழுந்து அவர் சாலையில் தூக்கி வீசப்பட்டார். பின்னால் வந்த தண்ணீர் லாரி ஒன்று அவர் மீது ஏறியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில் ஆட்சியர் வீரராகவராவ் உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |