மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே தூய்மைப்பணியாளர் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மாவட்டம் வண்டியூர் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன். அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மை பணியாளராக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதை பார்த்த அங்கிருந்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்ததோடு காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து விரைந்து வந்த காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் தற்கொலைக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.