பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள டாக்டர் எம்ஜிஆர் நினைவு விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை சார்பில் மாவட்ட அளவிலான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நேற்று நடைபெற்றது. இப்போட்டிகளில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 20-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 200-க்கும், மேற்பட்ட மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
இதில் சிலம்பம், டேக்வாண்டோ, கேரம், நீச்சல், வளையப்பந்து, பீச் வாலிபால் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டிகள் அனைத்தும் 14,17, 19 வயது என மூன்று பிரிவுகளாக நடைபெற்றன. இந்த போட்டியில் முதலிடம் பெறுபவர்கள் மட்டும் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்வர் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். மேலும் இப்போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பதக்கமும், சான்றிதழும் வழங்கப்பட்டன.