Categories
சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு – எகிறிய திருப்பூர் ….!!

தமிழகத்தில் 34 மாவட்டதிற்கு பரவிய கொரோனா வைரஸ் தாக்கத்தால் 1,173 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதன் மூலம், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,173 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதித்த 11 பேர் இதுவரை உயிரிழந்துள்ள நிலையில் 58பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். 33,850 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

63,380 பேர் 28 நாள் தனிமை முடிந்தவர்களாக உள்ள நிலையில் 136 பேர் அரசு முகாமில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார். இன்று அதிகபட்சமாக திருப்பூரில் 18 பேருக்கும், கரூரில்15 பேருக்கும், மதுரையில் 14 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் 34 மாவட்டத்தை கொரோனா பாதித்துள்ளது.

மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு : 

சென்னை – 208

கோவை – 126

திருப்பூர் – 78

ஈரோடு – 64

திண்டுக்கல் – 56

திருநெல்வேலி – 56

நாமக்கல் – 45

செங்கல்பட்டு – 45

திருச்சி – 43

தேனி – 41

கரூர் – 40

ராணிப்பேட்டை – 39

மதுரை – 39

திருவள்ளூர் – 33

நாகப்பட்டினம் – 29

தூத்துக்குடி – 26

விழுப்புரம் – 23

கடலூர் – 19

சேலம் – 17

திருப்பத்தூர் – 17

விருதுநகர் – 17

திருவாரூர் – 16

வேலூர் – 16

கன்னியாகுமரி – 15

திருவண்ணாமலை – 12

தஞ்சாவூர் – 11

சிவகங்கை – 10

நீலகிரி – 9

காஞ்சிபுரம் – 8

தென்காசி – 5

ராமநாதபுரம்  – 5

கள்ளக்குறிச்சி – 3

அரியலூர் – 1

பெரம்பலூர் – 1

Categories

Tech |