தமிழகத்தில் புதிதாக 64 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,885 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. 39 ஆண்கள், 25 பெண்களுக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 24ஆக உயர்ந்துள்ளது. தற்போது 838 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் புதிதாக 28 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை :
1. சென்னை – 523
2. கோயம்புத்தூர் – 141
3. திருப்பூர் – 112
4. திண்டுக்கல் – 80
5. ஈரோடு – 70
6. திருநெல்வேலி – 63
7. செங்கல்பட்டு – 58
8. நாமக்கல் – 59
9. திருச்சி – 51
10. தஞ்சாவூர் – 55
11. திருவள்ளூர் – 53
12. மதுரை – 75
13. நாகப்பட்டினம் – 44
14. தேனி – 43
15. கரூர் – 42
16. விழுப்புரம் – 47
17. ராணிப்பேட்டை – 39
18. தென்காசி – 38
19. திருவாரூர் – 29
20. தூத்துக்குடி – 27
21. கடலூர் – 26
22. சேலம் – 31
23. வேலூர் – 22
24. விருதுநகர் – 32
25. திருப்பத்தூர் – 18
26. கன்னியாகுமரி – 16
27. சிவகங்கை – 12
28. திருவண்ணாமலை – 15
29. ராமநாதபுரம் – 15
30. காஞ்சிபுரம் – 19
31. நீலகிரி – 9
32. கள்ளக்குறிச்சி – 6
33. பெரம்பலூர் – 7
33. அரியலூர் – 6
34. புதுக்கோட்டை – 1
35. தருமபுரி – 1.
மொத்தம் – 1,885.
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,020ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.