தமிழத்தில் இன்று மட்டும் 69 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 690ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா உறுதி செய்யப்பட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 64 வயது பெண் உயிரிழந்துள்ளார்.
இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7ஆக அதிகரித்துள்ளது. தமிழத்தில் மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதில், அதிகபட்சமாக சென்னையில் 149, கோவை -60, திண்டுக்கல்-45, நெல்லை-38, ஈரோடு-30, நாமக்கல் -28 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
மாவட்ட வாரியாக கொரோனா தொற்று இருப்பவர்களின் எண்ணிக்கை :
1. சென்னை -149
2. கோயம்புத்தூர் – 60
3. திண்டுக்கல் – 45
4. திருநெல்வேலி – 38
5. ஈரோடு – 32
6. திருச்சி – 30
7. நாமக்கல் – 28
8. ராணிப்பேட்டை – 27
9. செங்கல்பட்டு – 24
10. மதுரை – 24
11. கரூர் – 23
12. தேனி – 23
13. தூத்துக்குடி – 17
14. விழுப்புரம் – 16
15. திருப்பூர் – 16
16. கடலூர் – 13
17. சேலம் – 12
18. திருவள்ளூர் – 12
19. திருவாரூர் – 12
20. விருதுநகர் – 12
21. தஞ்சாவூர் – 12
22. திருவண்ணாமலை – 11
23. கன்னியாகுமரி – 6
24. காஞ்சிபுரம் – 6
25. சிவகங்கை – 5
26. காஞ்சிபுரம் – 6
27. சிவகங்கை – 5
28. வேலூர் – 5
29. நீலகிரி – 4
30. கள்ளக்குறிச்சி – 2
31. ராமநாதபுரம் – 2
32. அரியலூர் – 1
33. பெரம்பலூர் – 1
மொத்தம் – 690.
தமிழகத்தில் இதுவரை 5,305 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.