நாளை கடலூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.
மே-3 நாளையன்று ஊரடங்கு முடிவடைய இருந்த சூழ்நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வந்தன. அதன் பின் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட, பல மாவட்டங்கள் முழு ஊரடங்கை கடைபிடிப்பதில் மும்முரம் காட்டி வருகின்றனர். அந்த வகையில்,
கடலூர் மாவட்டத்தில் நாளை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வன் தெரிவித்துள்ளார். மிக அத்தியாவசிய பொருளான பால் மற்றும் மருந்துக் கடைகளைத் தவிர அனைத்து கடைகளும் மூடப்படும். பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகளை இன்றே வாங்கிக்கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை.
நடமாடும் காய்கறி கடைகள் செயல்படும் என்று தெரிவித்ததோடு, பால் மற்றும் மருந்துப் பொருட்களை வாங்குவதை தவிர வேறு ஏதேனும் காரணங்களுக்காக ஊராடங்கை மீறி வெளியே வருபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை செய்துள்ளார்.