Categories
அரியலூர் கடலூர் தஞ்சாவூர் திருவாரூர் மாநில செய்திகள்

நாளை முழு ஊரடங்கு….. வெளியே வரக்கூடாது….. 4 மாவட்ட ஆட்சியர்கள் அதிரடி…!!

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் நாளை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நாளை முழு ஊரடங்கை கடைபிடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், முதன்முதலாக கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் கடலூர் மாவட்டத்தில் நாளை முழு ஊரடங்கு என அறிவித்தார். இவர் அறிவித்ததை தொடர்ந்து திருவாரூர், அரியலூர் மாவட்ட ஆட்சியர்கள் தங்களது மாவட்டத்தில் நாளை ஒரு நாள் மட்டும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று அறிவித்தனர்.

இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தற்போது முழு ஊரடங்கு குறித்து அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், ஏற்கனவே சென்னை கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஒரு நாள் முழு ஊரடங்கு உத்தரவானது கொரோனாவை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டது.

அதேபோல் தஞ்சாவூரிலும் நாளை ஒருநாள் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும், இந்த உத்தரவை ஏற்று நாளை ஒருநாள் பொதுமக்கள் பால், மருந்து பொருள் உள்ளிட்டவற்றை வாங்குவதற்காக மட்டும் வெளியே வர வேண்டுமே தவிர வேறு எதற்காகவும் தயவுசெய்து வெளியே வரவேண்டாம் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Categories

Tech |