ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் வேன் கவிழ்ந்து விழுந்து விபத்தில் சிஆர்பிஎஃப் வீரர்கள் உள்ளிட்ட ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீ நகரில் இருந்து ஜம்மு காஷ்மீருக்கு புறப்பட்டுச் சென்ற வேனில் 6 பேர் பயணம் செய்துள்ளனர். ஜம்மு ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை வழியாக டிக்டோல் என்ற இடத்தை அருகே சென்ற போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் 300 அடி பள்ளத்தில் விழுந்தது. அந்த வேன் விழுவதற்கு முன் முன்னால் சென்ற கார் மீது மோதியதாக ராணுவ செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார். அந்த பள்ளம் செங்குத்தாக இந்த காரணத்தினால் பாதுகாப்பு வீரர்கள் கயிறு கட்டி கீழே இறங்கி சோதனை செய்தனர். அதில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 2 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ஒருவர் உயிரிழந்தார்.
ஒருவர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இறந்தவர்களின் மூன்று பேரை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். வேன் விபத்துக்குள்ளானதை அடுத்து சாலை பாதுகாப்பு ஆய்வு நடத்துவதற்கு துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். இந்த விபத்தை அடுத்து சாலை பாதுகாப்பு ஆய்வு நடத்தி சீரமைப்பு நடவடிக்கைகளில் ஒரு வாரத்தில் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட துறையினருக்கும் அவர் உத்தரவிட்டுள்ளார்.