Categories
தேசிய செய்திகள்

டியூசன் சென்ற பள்ளி மாணவி…. 4 பேரின் கொடூரச்செயல்…. மீண்டும் அரங்கேறிய அதிர்ச்சி….!!!!

டியூசன் சென்ற பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலமான சாஹரன்பூர் மாவட்டம் சட்பூர் கிராமத்தில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி வசித்து வருகிறார். இவர் கடந்த வியாழக்கிழமை பக்கத்து கிராமத்தில் டியூசன் பயிற்சிக்காக நடந்து சென்றுள்ளார். இந்நிலையில் அந்த மாணவியை பின் தொடர்ந்த 2 பேர் அவரை கிராமத்திற்கு அருகேயுள்ள காட்டிற்குள் இழுத்து சென்றுள்ளனர். இதனையடுத்து அங்கு இருந்த மேலும் 2 பேருடன் சேர்ந்துகொண்டு 4 பேரும் அந்த மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இதனிடையில் டியூசன் சென்ற தனது மகள் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி காவல்துறையினருடன் இணைந்து பெற்றோரும் மாணவியை தேடினர். அப்போது கிராமத்திற்கு அருகேயள்ள காட்டுப்பகுதியில் மயங்கிய நிலையில் கிடந்த பள்ளி மாணவியை காவல்துறையினர் மீட்டனர்.
இதனையடுத்து மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மாணவி தனக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை தொடர்பாக அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்தார். இதுகுறித்து மாணவியின் குடும்பத்தினர் கொடுத்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பாலியல் வன்கொடுமை செய்த 2 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 2 பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |