Categories
சினிமா தமிழ் சினிமா

“திருமணமான 2 வருஷத்துல விவாகரத்து”…. காரணம் என்ன….? நடிகை காயத்ரி ரகுராம் ஓபன் டாக்….!!!!

பிரபலமான நடன இயக்குனர் ரகுராம் மாஸ்டரின் மகள் காயத்ரி. இவர் பிரபுதேவா இயக்கத்தில் வெளியான சார்லி சாப்ளின் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பிறகு தமிழில் விசில், ஸ்டைல் பரசுராம் போன்ற ஒரு சில படங்களில் நடித்தார். அதன் பிறகு 14 வயதில் திரை உலகில் அறிமுகமான காயத்ரி ரகுராமுக்கு 22 வயதில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் நடைபெற்று 2 வருடங்களிலேயே காயத்ரி ரகுராம் தன் கணவரை விவாகரத்து செய்து கொண்டார். இந்நிலையில் ஒரு பேட்டியில் காயத்ரி ரகுராம் தன்னுடைய விவாகரத்து குறித்து பேசியுள்ளார்.

அவர் கூறியதாவது, என்னுடைய அப்பா எனக்கு 22 வயது இருக்கும்போதே திருமணம் செய்து வைத்து விட்டார். எனக்கு குறுகிய காலத்தில் விவாகரத்து நடந்த நிலையில் யாரையும் குறை சொல்ல முடியாது. எங்கள் விவாகரத்தில் அவரையும் என்னையும் குறை சொல்ல முடியாது. இந்த விவாகரத்தை பற்றி தற்போது கேட்பதில் எந்த ஒரு அர்த்தமும் கிடையாது என்று கூறினார். மேலும் நடிகை காயத்ரி ரகுராம் பாஜக கட்சியில் இணைந்து அரசியலில் தற்போது கவனம் செலுத்தி வரும் நிலையில் அண்ணாமலை அவரை 6 மாதம் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |