Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அமெரிக்காவில் விவாகரத்து…. இளம்பெண்ணிற்கு நேர்ந்த கொடுமை…. மடக்கி பிடித்த போலீசார்…!!

வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக வாலிபரை கைது செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர். 

சென்னை மாவட்டத்திலுள்ள ராயப்பேட்டையில் ஜெயஸ்ரீ என்பவர் வசித்து வருகிறார் இவருக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டத்தில் வசிக்கும் என்ஜினியரான வசந்தன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவரின் திருமணமானது திருமண தகவல் மையத்தின் மூலமாக வரன் பார்த்து நடைபெற்றுள்ளது. அதன் பிறகு அவர்கள் இருவரும் அமெரிக்காவில் குடியேறி விட்டனர். அதன்பின்னர் தம்பதிகளுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அமெரிக்காவில் உள்ள கோர்ட்டில் கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து இருவருக்கும் 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் விவாகரத்து வழங்கி கோர்ட் உத்தரவிட்டது. இந்நிலையில் சென்னைக்கு திரும்பிய ஜெயஸ்ரீ வசந்தன் பெயரில் அண்ணாசாலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வரதட்சனை கேட்டு தொந்தரவு செய்ததாக புகார் அளித்தார். இதனையடுத்து அமெரிக்காவில் வசித்து வந்த வசந்தனை கைது செய்யும் நடவடிக்கையாக  வசந்தனின் பாஸ்போர்ட்டை முடக்க கோரி கடந்த 9ஆம் தேதி குடியுரிமை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பின் அமெரிக்காவில் இருந்து சென்னை வந்த வசந்தனை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |